RSS Feed

சமதர்மம்

Posted by பித்தன்

ஒப்பீடுகளில் இல்லை உயர்வு,
உன்னிடம்  தான்.

உனது எல்லைகளை நீயே  தீர்மானிக்கிறாய்...
உனது பதவிகளை நீயே  வரையறுக்கிறாய்...
உன்னை நீயே  செதுக்கிக் கொள்கிறாய்...

யாரை கொண்டு மதிப்பீடு  செய்வாய்?
எதைக் கொண்டு உன்னை அளப்பாய்?

பஞ்ச பூதங்கள்
படிக்கல் பற்றி
கவலைப்படுவதில்லை.

இங்கே நிறுவைகளின் நிலைப்பாடு
சமதர்மம்தான்.
தராசுகள் மட்டும் தன்னலத்தின் கைகளில்.

பிறர் தாழ்த்தி உயர்ந்தும்
பிறர் உயர தாழ்ந்தும்

வளர்ந்து விட்ட
வரையறைகள்.

கையேந்தும் ஏழை சகோதரன்.
கைகொடுக்க கஷ்டப்பட்டு
காசெறியும் கனவான்.

தாழ்ந்து வணங்கும் அவன்.
உயர்ந்து ஏற்கும் இவன்.

சில்லறைகளில் எங்கள் உயர்வு.
சாகும்போது நெற்றிக்காசாய்...

ஒற்றை ரூபாய்
ஒற்றுமையில்
சமதர்மம்.

எரிக்கவா? புதைக்கவா?
ஏற்றதாழ்வுகள்.

சுயநல ஓநாய்கள்
சுடுகாட்டிலும்...

மனச்சாட்சி..

Posted by பித்தன் Labels:

ஒவ்வொரு
முறையும்
கவனம்
செலுத்தினேன்

ஒப்பனைகளில்,

அழகானது
புறக்காட்சி.

அம்மணமானது
மனச்சாட்சி..

மரணம்

Posted by பித்தன் Labels:

எத்தனை ஒத்திகை
எடுத்துப் பார்த்தாலும்
அச்சத்தை மட்டுமே
மிச்சமாய் கொடுக்கும்
கடைசியும் முதலுமான
கட்டாய
அரங்கேற்றம்